"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதா குடி மக்களின் உரிமைக்கு எதிரானது அல்ல" - மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மக்களவையில் பதில்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதா, சுற்றுப்புற சூழ்நிலை குடி மக்களின் உரிமைக்கு எதிரானது அல்ல என, மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மக்களவையில் தெரிவித்துள்ளார்.
திமுக உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சுற்றுச்சூழல் விதிகளை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், சுற்றுச்சூழல் நடைமுறைக்குள் கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். சுற்றுச்சூழல் விதிமுறை மீறல் குறித்து பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ புகார் அளிக்கும் உரிமையை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story

