கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.
கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி
x
சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசோக் கஸ்டி, நேற்று உயிரிழந்தார். இவர் கடந்த ஜூலை 22 மாதம் தான் மாநிலங்களவையில் எம்பி யாக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.  அசோக் கஸ்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவருடைய மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அசோக் கஸ்டி ஆர்வம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இதுபோல, குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் அசோக் கஸ்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்