"விவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி" - வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

விவசாயிகள் மசோதா நிறைவேறியதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி - வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
x
விவசாயிகள் மசோதா நிறைவேறியதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுதலை வாங்கி கொடுத்துள்ளார் எனவும் இதற்காக ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் நரேந்திர சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்த விவசாய சீர் திருத்தங்களை கூறியதாகவும் ஆனால் ஒருபோதும் இதை செயல்படுத்தும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அந்த கட்சிக்கு இருந்ததே இல்லை எனவும் அமைச்சர் நரேந்திர சிங் குற்றஞ்சாட்டி உள்ளார். 


விவசாயிகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மசோதா 2020- "தங்குதடையில்லா வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்"

முன்னதாக, விவசாயிகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமைச்சர் நரேந்திர சிங் தாக்கல் செய்த அந்த மசோதாவில், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கில், மசோதாக்களை தாக்கல் செய்து உள்ளதாகவும், இதன் மூலம் விளை பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், தங்கள் விருப்பம் போல் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதிகாரம் அளிக்கும் என்று கூறப்பட்டது. தங்கு தடையில்லா வர்த்தகம் மூலம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், இதற்காக ஜூன் 5ஆம் தேதி அவசர சட்டதை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
==

Next Story

மேலும் செய்திகள்