விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்
x
விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, வேளாண் உற்பத்திப் பொருள் மற்றும் வணிக மசோதா ஆகியவற்றின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல், இந்த மசோதாக்கள், விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பஞ்சாபில் உள்ள 20 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 
மேலும், பாஜக அரசுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் அதே நேரம், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என்றும், அவர் கூறினார். கணவரும், கட்சித்தலைவருமான சுக்பீர் சிங் பாதல் பேசியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல். இதனை தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அவர், விவசாயிகளின் மகளாகவும், சகோதரியாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்