370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
x
370-வது  சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பாக 2018 ஜூன் 29  முதல் 2019 ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 455 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும்,  அது நீக்கப்பட்ட  402 நாட்களில் மொத்தம் 211 தீவிரவாத சம்பவங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளதாக உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.மேலும், இந்த காலக் கட்டத்தில், நாட்டில் பெரிய அளவில் எந்த தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்