அமெரிக்க அதிபர் வருகைக்காக தள்ளிவைப்பு - மோடி அரசு மீது மாநிலங்களவையில் தி.மு.க. பரபரப்பு புகார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் பயணத்தை முன்னிட்டே, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொது முடக்கத்தை மார்ச் 24 ஆம் தேதி அமல்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது.
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் பயணத்தை முன்னிட்டே, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொது முடக்கத்தை மார்ச்  24 ஆம் தேதி அமல்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. நாட்டில், ஜனவரி 22 ஆம் தேதியே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் இயங்கியது, விமானங்கள் பறந்தன, திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்ததாகவும் தி.மு.க. எம்.பி. திருச்சி .சிவா சுட்டிக்காட்டி உள்ளார். பிப்ரவரியில் குஜராத் வந்த ​அமெரிக்க அதிபரின் வருகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதாகவும், அவரது வருகைக்காகவே, பொது முடக்கம்  தள்ளி வைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பிளாஸ்மா சிகிச்சை குறித்த நிலவரம் என்ன? என எந்த  தகவலையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு மாறாக மத்திய அமைச்சர்கள், அரசை பாராட்டி கொண்டிருப்பதாக திருச்சி சிவா சாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்