"அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.?" - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 04:19 PM
விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி, வீடு கட்டும் திட்டங்களில் நடந்து வரும் இமாலய ஊழல் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் பெயரிலான விவசாய நிதி 6 ஆயிரம் ரூபாய், விவசாயி' என்று சொல்லிக் கொள்ளும் போலிகளுக்கு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளதாக, அறிக்கையில் கூறியுள்ளார். முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி,  4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அதிமுக ஆட்சியாளர்கள் மீது, சி.பி.ஐ. விசாரணை நடத்தி, மத்திய அரசு நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

395 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

317 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

105 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

38 views

பிற செய்திகள்

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

1 views

கிசான் திட்டத்தில் முறைகேடாக பதிந்த 1,908 பேர் - மீண்டும் ஆவணங்களை கேட்பதால், விவசாயிகள் அதிர்ச்சி

கரூரில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளியிடம், 8 ஆயிரம் ரூபாயை வேளாண் அதிகாரிகள் திரும்ப எடுத்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

19 views

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

6 views

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

28 views

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

83 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.