3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்கிறார்
3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்
x
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இரண்டாவது உலகப் போரில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் மாஸ்கோவில் நடந்த பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று ரஷ்யா  செல்கிறார். இந்த மாநாட்டின் போது, சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன், ராஜ்நாத் சிங் தனியாக சந்தித்து பேசுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என கூறுப்படுகிறது. இந்தியா, சீனா இடையிலான உறவில் உரசல் நீடித்து வரும் நிலையில், இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. 3 நாள் பயணமாக ரஷ்யா செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்புத்துறை  அமைச்சர் மற்றும் பல்வேறு உயர் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். பாதுகாப்புத் துறைக்கு தேவையான ஆயுத, தொழில் நுட்ப கொள்முதல் திட்டங்கள் இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய இடம் வகிக்கும் என  கூறப்படுகிறது. செப்டம்பர் 10-ல் நடைபெற உள்ள ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு, அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாண்மைகளின் கீழ் முதற்கட்டமாக 20 ஆயிரம்  ஏ.கே. 203 ரக துப்பாக்கிகள் ரஷ்யாவில் இருந்து அக்டோபர் மாதம் இந்தியா வர  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்