"தொற்றுக்கு முன்பே மோசமான பொருளாதாரம் : கடவுளின் தூதர் எப்படி விளக்க போகிறார்" - மத்திய நிதி அமைச்சருக்கு ப.சிதம்பரம் கேள்வி

கொரோனாவுக்கு முன்பே, பொருளாதாரம் மோசமானது குறித்து கடவுளின் தூதரான மத்திய நிதியமைச்சர் எப்படி விளக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொற்றுக்கு முன்பே மோசமான பொருளாதாரம் : கடவுளின் தூதர் எப்படி விளக்க போகிறார் - மத்திய நிதி அமைச்சருக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிய தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா கடவுளின் செயல் என்றும் கருத்து கூறியிருந்தார். இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் அதற்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்கு என்ன விளக்கம் அளிக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி  வருவாய் இழப்பு விவகாரத்தில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள இரண்டு தேர்வுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனக் கூறிய அவர்,  மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும் என குற்றம்சாட்டியுள்ளார். இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை  நேரடியாக மீறுவதாகும் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்