டெல்லியில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி., நீட், ஜே.இ.இ. தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லியில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
x
டெல்லியில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகை நிலுவையில் இருப்பதாக பல்வேறு மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனா பரவல் ஊரடங்கால் மாநிலங்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மத்திய அரசின் செயல்பாடு  அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படுவது குறித்து பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநில முதலமைச்சர்களுடன் சோனியாகாந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஜி.எஸ்.டி. விவகாரம் மட்டுமின்றி  நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்