ராகுலுக்கு பெரும் ஆதரவு - சல்மான் குர்ஷித்

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புவதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு பெரும் ஆதரவு - சல்மான் குர்ஷித்
x
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புவதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

அதனை ஏற்கிறாரா , இல்லையா என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லை.. அவரை  தலைவராக்க அனைவரும் விரும்புகிறார்கள் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சி தலைவர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நடத்துவதை விட ஒருமித்த குரலில் ஒருவரை தேர்வு செய்வதே, பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாளை காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் காரிய குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, கட்சியின் மூத்த தலைவர்கள் 20 பேர் சோனியா காந்திக்கு இதே கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்