வி.ஹெச்.பி.-யின் மாவட்ட பொறுப்பாளரின் கார் சேதம் : போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி தகராறு
கோவையில், போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக உள்ள ராமகிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.
கோவையில், போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக உள்ள ராமகிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் உள்ள இவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள் 4 பேர், வீட்டிற்குள் புகுந்து, போஸ்டரில் ஏன் தங்களது பெயர்களை போடவில்லை என்று கூறி, தரக்குறைவாக பேசி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

