வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

ஒரே தேசம் ஒரே சந்தை திட்டத்தால் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்..
வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி - பிரதமர் நரேந்திர மோடி  அறிவிப்பு
x
ஒரே தேசம் ஒரே சந்தை திட்டத்தால் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்..  வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு  ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான நிதியத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அறுவடைக்குப் பின் விவசாயப் பொருட்களை பாதுகாக்க குளிர் சாதன கிடங்குகள் அமைப்பு,  சேகரிப்பு மையங்கள் அமைக்க இந்த திட்டத்தில் கடன் வழங்கப்படும். இதற்காக, 12 பொதுத்துறை வங்கிகள், 11 வேளாண்மை வங்கிகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விவசாயிகள் 3 சதவீத வட்டியில் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாயும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வீதமும் கடன் அளிக்கப்படும். விவசாயிகளுக்கு கடன் உதவி நேரடியாக கிடைக்கும் வகையில், ஆதார் எண் இணைக்கப்பட்ட  வங்கிக்கணக்கில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும். கடன் உதவியை விரைவாக்கும் வகையில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தால், ஆன்லைன் வழியாகவே கடன் ஒப்புதல் அளிக்கவும் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்