ஆந்திர முதல்வருக்கு கோயில் கட்டும் எம்.எல்.ஏ. - சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராவ் கருத்து

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் பணியில் இறங்கி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
ஆந்திர முதல்வருக்கு கோயில் கட்டும் எம்.எல்.ஏ. - சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராவ் கருத்து
x
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் ராஜம்பாளையத்தில் சட்டமன்று உறுப்பினர் வெங்கட்ராவ், ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட முடிவு செய்து நேற்று பூமி பூஜை நடத்தியுள்ளார்.  மாநில மக்களுக்கு கேட்காமலேயே பல உதவிகளை ஜெகன்மோகன் ரெட்டி செய்து வருவதாக தெரிவித்த வெங்கட்ராவ், அதனால் மிகவு கவரப்பட்டே, இந்த கோவில் கட்டுவதாக தெரிவித்தார். நடிகர், நடிகைகளுக்கு கோவில் கட்டுபவர்கள், நமக்காக உழைக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட வேண்டும் என வெங்கட்ராவ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்