அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி
x
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி செல்கிறார். 
அயோத்தி சாகேத் மகா வித்யாலயாவில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு காலை11.30 மணிக்கு  வந்தடையும் பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து அனுமான் கரி கோயிலுக்கு 11.40 மணிக்குச் சென்று வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து 11.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராம ஜென்ம பூமிக்கு  நண்பகல் 12 மணிக்கு வந்து சேருகிறார். ராம் லல்லா விராஜ்மன் என்று அழைக்கப்படும் குழந்தை ராமரை வழிபட்டு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்கிறார். பின்னர் அந்த வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றை பிரதமர் நடுகிறார்.12.30 மணிக்கு நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்று, ராமர் கோயில் கட்டுமான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி,  சுமார் மூன்று மணி நேரம் அங்கு இருப்பார் .


Next Story

மேலும் செய்திகள்