"வேலையின்மை பிரச்சனைக்கு விரைந்து தீர்வுக் காணுங்கள்" - பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுக் காணாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து போராடும் நிலை ஏற்படும் என சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
வேலையின்மை பிரச்சனைக்கு விரைந்து  தீர்வுக் காணுங்கள் - பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை
x
கொரோனா தொற்று பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கார் சுமார் 10 கோடி பேர் நேரிடையாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என சிவசேனா எம்.பி.  சஞ்சய் ரவாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஊரடங்கு 40 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மாத வருமானம் ஈட்டும் நடுத்தர வர்க்கம் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களும் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர் என சாம்னா இதழில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மக்களின் பொறுமைக்கும் அளவு உண்டு என எச்சரித்துள்ள அவ​ர், நம்பிக்கையிலும், வாக்குறுதியை நம்பியும் எவ்வளவு நாட்கள் மக்கள் வாழ முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற பாதுகாப்பற்ற ஒரு நிலையை, முன்பு எப்போதுமே மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பிரதமர் சொன்னது போல ராமரின் வனவாசம் முடிந்து விட்டது என்றும், மக்களின் பொருளாதார நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையின்மை பிரச்சனைக்கு முடிவு கட்டாவிட்டால், இஸ்ரேல் போல, பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவிலும் வரும் என சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். பிரச்சனைகள், சிக்கல்கள் பல வாய்ப்புகளை உருவாக்கும் என கூறுவது எளிது என்றும், அதற்கு தீர்வு காணுவது யார் என பா.ஜ.க. தலைவர் நட்டாவை மறைமுகமாக சாடியுள்ளார் சஞ்சய் ராவத்.

Next Story

மேலும் செய்திகள்