அமித் ஷா, பன்வாரிலால் புரோஹித் நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை

மத்தியமைச்சர் அமித்ஷா மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமடைய அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
அமித் ஷா, பன்வாரிலால் புரோஹித் நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை
x
அமித்ஷா விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமித்ஷா விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி பூரண நலம் பெற தமிழகம் சார்பாக வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நோயிலிருந்து மீளவும் முதலமைச்சர் பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார். அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதாகவும், அவர் பூரண நலம் அடைய வாழ்த்துவதாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார். 

அமித்ஷா மற்றும் பன்வாரிலால் புரோஹித் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர் விரைவாக குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்