முதலமைச்சர் சார்பில் சீமான் மீது அவதூறு வழக்கு - ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
பதிவு : ஜூலை 31, 2020, 02:52 PM
முதலமைச்சர் சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், முதலமைச்சர் பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை என்றும் பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகளையே விமர்சனம் செய்யப்பட்டது என்றும் சீமான் குறிப்பிட்டிருந்தார். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசியதாகவும் சீமான் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேயன், முதலமைச்சர். குறித்து சீமான் கடுமையாக வார்த்தைகள் கொண்டு அவதூறாக பேசியதாக வாதிட்டார்.இதையடுத்து, சீமானின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

255 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

239 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

79 views

பிற செய்திகள்

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

8 views

சுதந்திர தின விழா ஒத்திகை - சமூக விலகலுடன் போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

19 views

"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

168 views

"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 views

திருச்சி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - சமூக இடைவெளி இன்றி மீன்கள் வாங்கி சென்றனர்

நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூடினர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.