சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் விடுதலை
பதிவு : ஜூலை 31, 2020, 02:21 PM
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்தியதாக ராஜ்குமார்  உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் என்பவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள்,  வன்கொடுமை வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகியோரை  விடுதலை செய்து உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5349 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2371 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

471 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

339 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

274 views

பிற செய்திகள்

ஏரியை ஆக்கிரமித்த வீடுகளை அகற்ற கடிதம் - 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஏரி மீது ஆக்கிரமித்து வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 views

23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் ரூ.17,423 கோடி - தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தின் நஷ்டம் ரூ.7,582 கோடி

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான 55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் 17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6 views

ரூ.10 லட்சம் கேட்டு மனைவிக்கு துன்புறுத்தல் - மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்

வரதட்சணை கொடுக்க மறுத்த மனைவியின் ஆபாசப் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்...

7 views

முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் விவகாரம்: "சாமானிய மக்களுக்கு பாதிப்பு" - எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எஸ்.ஆர்.எம்.யூ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

8 views

"கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

202 views

செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி.... காட்டிக்கொடுத்த கேமரா..

சென்னையில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து திருட்டில் ஈடுபடுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.