"விவசாயிகளின் நலனை காப்பற்ற வேண்டும்" - தமிழக அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : ஜூலை 30, 2020, 05:17 PM
மாற்றம் : ஜூலை 30, 2020, 05:23 PM
பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளை பாதுகாத்து, அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு  போக விளைச்சலுக்கே விவசாயிகள் திண்டாடி கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் அரசு அலட்சியம் காட்டி வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் , வேதனையையும் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  நெல்கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும்  பாதுகாப்புடனும் இருப்பதில்லை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறும் தரையிலேயே நெல் மூட்டைகளை அடுக்கியதாலும், 
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாகவும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த நிலை தொடர்வதாகவும் ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

138 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

53 views

பிற செய்திகள்

"பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்" - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என கூறியுள்ளார்.

9 views

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

42 views

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

270 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

250 views

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.