இளைஞர் மகேந்திரன் உயிரிழப்பு - சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இளைஞர் மகேந்திரன் உயிரிழப்பு - சிபிசிஐடி விசாரணை
x
பேய்க்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக உயிரிழந்த மகேந்திரனின் சகோதரி, தாயார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் விசாரணை முடித்தனர். இந்நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராகும் படி மகேந்திரனின் உறவினர்கள் ராஜா, கண்ணன், மாடசாமி மற்றும் நெருங்கிய நண்பர் மணி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 
வேலை காரணமாக ஆஜராக முடியாததால் இன்று ஆஜராகி விளக்கமளிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 
காலை11 மணிக்கு அவர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில், விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,  உயிரிழந்த விவசாயியின் உடலை, மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட கோரிய வழக்கு,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பான மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உடற்கூராய்வு அறிக்கை  உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என்பதால் வழக்கை ஒத்தி வைக்குமாறு அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இன்று காலை முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.



என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று - முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு  கொரோனா பரிசோதனை

இன்று முடிவுகள் வெளியாகும் - சுகாதாரத்துறை 
தகவல்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு 3-வது முறையாக சோதனை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலு மற்றும் 2 சபை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் மற்றும் சபை காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் நாராயணசாமிக்கு 3வது முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது



கேரள தங்க கடத்தல் வழக்கு - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விசாரணை


கேரள மாநிலத்தில், தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான  சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.  கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர்,  தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.  போலி சான்றிதழ் மூலம் கேரள அரசின் ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர். கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, குற்றவாளிகளுடன் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள், மீண்டும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கரனுக்கு  உத்தரவிட்டனர்



கேரளாவிற்கு நூதன முறையில் தங்கம் கடத்தல் வழக்கு - பைசல் பரீத் , ரபின்ஸ் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை

துபாயிலிருந்து கேரளாவிற்கு நூதன முறையில் தங்கம் கடத்தல் வழக்கில் பார்சலை அனுப்பிய பைசல் பரீத் மற்றும் ரபின்ஸ் ஆகியோரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு  அமைப்பு அதிகாரிகள் இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்