"வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு" - பிரதமர் மோடி

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு - பிரதமர் மோடி
x
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அமைக்கப்பட்ட உயர் திறன் பரிசோதனை மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு, வளர்ந்த  நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார். கொரோனாவை எதிர்த்து கோடிக்கணக்கான இந்தியர்கள் தைரியத்துடன் போராடி வருவதாக தெரிவித்த பிரதமர் உயர் திறன் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டதன் மூலம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் கொரோனாவுக்கு எதிராக மேலும் வலிமையுடன் போராடும் என்றார்.
நாட்டில் 1,300  கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும், இவற்றின் மூலம் 5 லட்சம் பரிசோதனைகளுக்கும் மேல் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்