வணிகர்களிடம் ஆட்சியரை பேச விடாமல் தடுத்த எம்.எல்.ஏ. - ஆரணி அரசு விழாவில் பரபரப்பு
பதிவு : ஜூலை 26, 2020, 08:46 AM
ஆரணியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க வந்த ஆட்சியரிடம் மனு அளித்து பேசிக் கொண்டிருந்த வியாபாரிகளிடம், ஆட்சியரை பேச விடாமல் இடையில் அழைத்து சென்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன்  பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், ரத்த சோகை குறைபாடு உள்ள இரண்டாயிரத்து 647 கர்ப்பிணி பெண்களுக்கு  சிவப்பு அரிசி, அவல் கலவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரன் சிவப்பு அரிசி மற்றும் அவள் கலவை ஆகியவை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்ததுடன், அதுபற்றி பேசிக் கொண்டிருந்தனர். வியாபாரிகள் உடன் பேசவிடாமல், ஆட்சியரை, எம்.எல்.ஏ. தூசி மோகன் அங்கிருந்து அழைத்து சென்றார். ஆட்சியருக்கான காத்திருந்த வியாபாரிகள், அவர் திரும்பி வராததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

115 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

45 views

பிற செய்திகள்

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

30 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

622 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

24 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

117 views

கிசான் முறைகேடு : "தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும்" - சிபிசிஐடி தகவல்

பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடி-யிடம் பட்டியல் வழங்கியுள்ளது.

64 views

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தோண்டி எடுப்பு - உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்

தஞ்சையில் தனியார் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட உடல்உறுப்பு திருட்டு புகாரால் கொரோனாவால் இறந்தவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

539 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.