"ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம்: ஒருபோதும் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்" - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்

தேவைப்பட்டால் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தயாராக உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம்: ஒருபோதும் நிறைவேற அனுமதிக்க மாட்டேன் - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்
x
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு அம்மாநில சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் நேற்று மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப் பேரவையைக் கூட்ட வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா யாரையோ திருப்திபடுத்தும் வகையில் செயல்படுவதாகவும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பா.ஜ.க. சதித்திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என அசோக் கெலோட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேவைப்பாட்டால் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட தயாராக உள்ளதாக அசோக் கெலோட் எச்சரித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்