மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக புகார்" - திமுக வழக்கு ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது, உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூலை 22, 2020, 06:35 PM
மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை, ஆகஸ்ட் மாதத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை, ஆகஸ்ட் மாதத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.  சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக  அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மீதான புகார்கள் தொடர்பாக, கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் உள்ள வரை அமைச்சர் குறித்து  பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தலங்களில் அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

686 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

429 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

415 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

111 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

14 views

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.

11 views

கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்

18 views

தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது

15 views

தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்

தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

9 views

தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.