கொரோனா பரிசோதனைக்கு ஏதுவாக 52 நவீன பேருந்துகள் - கிராமம் தோறும் சென்று அனைவருக்கும் சோதனை

கிராமப்புறங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய ஏதுவாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 52 நவீன பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரிசோதனைக்கு ஏதுவாக 52 நவீன பேருந்துகள் - கிராமம் தோறும் சென்று அனைவருக்கும் சோதனை
x
கிராமப்புறங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய ஏதுவாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 52 நவீன பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. தலா ஒரு பேருந்தின் மூலம், நாளொன்றுக்கு 200 முதல் 300 பேரை பரிசோதிக்க முடியும் என கூறப்படுகிறது. சோதனை மாதிரிகளை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஒரே நாளில் தொற்று முடிவுகளை அறியலாம்.  மாநிலத்தில் உள்ள13 மாவட்டங்களுக்கு தலா நான்கு பேருந்துகள் ஓரிரு தினங்களில் அனுப்பப்பட உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கப்படும் என அந்த மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்