மத்தியப் பிரதேசத்தில் சோலார் பூங்கா துவக்கம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
x
ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவில், 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 சூரிய மின்சக்தி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா  ஆகியவை இணைந்து, இதனை உருவாக்கி உள்ளன. இதற்கு, மத்திய அரசு 138 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமுகமான ஒருங்கிணைப்பு இருந்தால், மிக சிறந்த பலன்களை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ரேவா சூரிய சக்தி திட்டம் விளங்குவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்