"நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன" - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன - பிரதமர் மோடி
x
* 3 நாள் நடைபெறும் கருத்தரங்கில், 30 நாள் இந்தியா குளோபல் வீக்-2020 எனப்படும் உலகளாவிய மூன்று நாள் உச்சி மாநாட்டை 
பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

* மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக குறிப்பிட்டார். 
 
* மக்களின், சுகாதார நலன் போல  பொருளாதார நிலைமையிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

* உலகிலேயே, இந்தியா திறந்த வெளிப்படையான பொருளாதாரம் கொண்ட நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். 

* வேளாண் துறையிலும்,  பாதுகாப்பு துறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் முதலீடுகளுக்கு உகந்ததாக உள்ளதாகவும்,

* விண்வெளித் துறையில் தனியார் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

* கொரோனா காலத்தில் மருந்து உற்பத்தித்துறை, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே பொக்கிஷம் என, பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

* அதே நேரத்தில் மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த மக்கள், குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்க, உதவியது குறிப்பிடத்தக்கது என, பிரதமர் கூறினார். 

* சீர்திருத்தங்களும்,  வளர்ச்சிகளும் கொண்ட இந்தியா மக்களுக்காக காத்திருக்கிறது, என்றும்,
  
* நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்