"ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஜூலை 07, 2020, 09:27 PM
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 136 கோடி ரூபாய் செலவில் கொரோனா தடுப்பு  சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்
750 படுக்கைளுடன், அனைத்து நவீன வசதிகளை கொண்டது இந்த சிறப்பு மருத்துவமனை என்று கூறினார்.

மக்கள் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவலையும் தடுக்க வேண்டும், மக்கள் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.  ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாகவும், வீடு வீடாக சென்று  பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக தொற்று பரவல் ஏற்படவில்லை என்று கூறிய அவர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்று தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நியாயவிலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று காற்றில் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறினால், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

66 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

17 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி..." - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

73 views

7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்

கொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

13 views

"மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைக்க நடவடிக்கை வேண்டும்" -திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கை பரண்மேல் தூங்குவதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

20 views

அக்.1 முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக உள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

136 views

7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

420 views

ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் ஆந்திர முதல்வர் - உறுதி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகள் கோரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் வருகை தந்து, ஏழுமலையானுக்கு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

1532 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.