கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று
பதிவு : ஜூலை 05, 2020, 01:26 PM
கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனின் மகள், கடந்தவாரம்  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது மகள், மருமகன் பேத்தி ஆகியோருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கும், கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

3078 views

சிம்பு பாம்பு பிடித்ததால் வந்த பிரச்சினை - இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம்

சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சி சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, "ஈஸ்வரன்" படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கமளித்துள்ளனர்.

1408 views

பிற செய்திகள்

டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

26 views

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா - குழந்தைகளுடன் கேக் வெட்டி திருமாவளவன் கொண்டாட்டம்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

138 views

புயல் பாதித்த மக்களுக்கு பொருளாதார உதவி வழங்க வேண்டும் , பாதிப்புகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் - பாமக

நிவர் புயலால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பொருளாதார உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

19 views

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை" - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

179 views

நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

19 views

"2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

சி.ஏ.ஜி. அறிக்கை மூலமாக எச்சரித்தும் - 2015 பெரு வெள்ளத்திலிருந்து அ.தி.மு.க. அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

116 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.