முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
பதிவு : ஜூன் 26, 2020, 05:36 PM
கொரோனா பேரிடரை ஒட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்க பெற்ற நன்கொடை விவரங்களில் மறைப்பதற்கு எதுவுமில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நன்கொடை விவரங்களை இணையதளத்தில் வெளியிட கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவோலை, காசோலை, இணையம் என  பல்வேறு வகையில் நிதி வருவதால் அந்த தகவல்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் இருப்பதாகவும், எனினும் அனைத்தையும் தொகுத்து இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல, 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகை, மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு,  அதனை முழு கவச உடைகள், வென்டிலேட்டர்கள், மருத்துவமனை உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்,பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், ஜூன் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

426 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

107 views

பிற செய்திகள்

சேலம் தனிமை முகாமில் பெண் தற்கொலை - ஊழியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

16 views

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது - அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம்.

17 views

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு - வெகுமதி வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கினார்.

6 views

"கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய்" - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8 views

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும் தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.