சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்
பதிவு : ஜூன் 26, 2020, 12:34 PM
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இ மெயிலில், தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். தமது தொகுதிக்கு உட்பட்ட சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை, மகன் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் 58 வயதான ஜெயரா​ஜ் மற்றும் 31 வயதான பென்னிக்ஸ்  இருவரும் அங்கு 10 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதோடு, சமூகத்திலும் மரியாதை உடன் இருந்து வந்ததாகவும் கனிமொழி சுட்டிக்காட்டி உள்ளார். ஊரடங்கு உத்தர​வை மீறியதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரை பார்க்கச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த சாத்தான் குளம் போலீசார் இருவரையும் சிறைப் பிடித்ததாகவும் இரவில் நடத்திய விசாரணையின்போது, பென்னிக்ஸின் ஆசனவாயிலில் லத்தியை நுழைத்து கடுமையாக தாக்கியதில் ரத்தம் பீறிட்டுள்ளது என்றும், இதேபோல, ஜெயராஜின் மார்பில் பூட்ஸ் காலால் மாறி மாறி  மிதித்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழ​ந்து உள்ளதாகவும் கனிமொழி அதில் கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவரை மிரட்டி இருவர் உடல் நிலையும்ம நன்றாக உள்ளதாக சான்றிதழ் வாங்கிய சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்.  நீதிபதி முன்பு 50 மீட்டர் இடைவெளியில் இருவரையும் நிறுத்தி ரிமாண்ட் உத்தரவு பெற்றதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அரசு அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 15 லாக் அப் சாவுகள் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவத்திலாவது விரைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட வேண்டும் என கனிமொ​ழி வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2346 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1192 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

308 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

102 views

பிற செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

23 views

சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146

சென்னையில் கொரோனாவிற்கு 14 ஆயிரத்து 146 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

70 views

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

14 views

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

583 views

காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

30 views

காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா : ஆரவாரம் இல்லாத மிக எளிமையான தலைவர்

அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் நினைவுகூறப்படும் ஆகச் சிறந்த தலைவர் காமராஜரின்118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.