காவல், சிறைத்துறை, சிறைவாசிகளுக்கு சோதனை நடத்தக் கோரி வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 26, 2020, 12:28 PM
காவல் மற்றும் சிறை துறையினர், சிறைவாசிகளுக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க கோரிய வழக்கில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா பரவலை தடுக்கும் பணிகளில் முன்னணியில் இருந்து இரவு பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் காவல் துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அங்கு கொரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகிய உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், இதுவரை அங்குள்ள கைதிகளுக்கு சோதனையும் நடத்தவில்லை என்றும், தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மனுவில் இடம் பெற்றுள்ளது. காவல் மற்றும் சிறைத் துறையினர், சிறைவாசிகளுக்கு முறையாக பரிசோதனை நடத்தி, முழு உடல் மற்றும் முக கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிறை, காவல் துறையினருக்கும், கைதிகளுக்கு ஏற்கனவே முக கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

605 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

157 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 views

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

40 views

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

மருத்துவ முகாம் மூலம் மட்டும் 11 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

125 views

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

174 views

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

382 views

நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.