கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்
பதிவு : ஜூன் 23, 2020, 03:37 PM
கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் மருத்துவமனையில் இருப்போர் இறப்பு அதிகமாகி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறையில் இருந்த இருவரது மரணம், அதிர்ச்சிக்குரியதாகவும் கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது என கூறியுள்ளார். 'லாக்அப்' மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

456 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

ஆன்லைன் வழி கல்வி திட்டம் இந்தியாவிற்கு உகந்த திட்டமா?

பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்ற விவகாரத்தில் தமிழக அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்பட உயர்கல்வித்துறை சார்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..

17 views

காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்

17 views

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, முதலமைச்சருக்கு 2 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

39 views

சாத்தான்குளம் விவகாரம் மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு கட்டுரை வெளியீடு

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடத்திய கள ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக மக்கள் கண்காணிப்பகத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 views

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

74 views

முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.