எல்லைக்குள் சீன படைகள் நுழைந்தது எப்போது ? - சோனியா காந்தி கேள்வி
பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழைந்தது எப்போது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்திய அரசின் வெளியுறவு நுண் பிரிவு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸும் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்போம் என்று உறுதியளித்தார், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்றைய தினம் வரை அந்த பகுதியில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாக தெரிவிக்குமாறு பிரதமர் மோடியை சோனியா காந்தி கேட்டு கொண்டார்.
Next Story

