அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேக்கர்  மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். அப்போது, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து காய்கறி, எண்ணெய் வித்து, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதன் மூலமாக, விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு இனிமேல் யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்கும் உரிமை  கிடைத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உணவு தானிய தட்டுப்பாடு இல்லை என்றும், தட்டுப்பாடு உள்ள காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்தது சரியான முடிவு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.  ஒரே நாடு ஒரே சந்தை என்ற கோட்பாட்டின் முதல் நிலை இந்த முடிவு என்றும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு, வேளாண்துறையின் முகத்தையே மாற்றும் என்றும், அந்த துறையில் முதலீட்டுக்கு வழிவகுக்கும் என்றும் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்