ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என நான்கு முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என நான்கு முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

* டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேக்கர், நிதின் கட்கரி மற்றும் நரேந்திர சிங் தோமர் இதனை அறிவித்தனர்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையரை மாற்றி அமைத்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்.

* இந்த நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

* மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

* இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு நான்கு சதவீத வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

* மேலும் காரீப் பருவ பயிர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் தோமர், இதனால் விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் கூடுதல் விலை கிடைக்கும் என தெரிவித்தார்.

* நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ஆயிரத்து 868 ஆக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்