மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
x
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, வைகோ, திருமாவளவன்,  கே.பாலகிருஷ்ணன், முத்தரசன்,காதர் மொய்தீன், ஜவஹிருல்லா, கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு பின்பற்றாதது குறித்து விவாதிக்கப்பட்டது. 
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  மத்திய அரசு 7500 ரூபாயும் மாநில அரசு 5000 ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்