ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
பதிவு : மே 27, 2020, 07:25 PM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், வேதா நிலையம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்ப்போம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாய் நடிகை  சந்தியா- தந்தை ஜெயராமனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் அவரது சகோதரர் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு  இரண்டு பிள்ளைகள். ஒருவர் தீபக் மற்றவர் தீபா. 

கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயில் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வாங்கிய ஜெயலலிதா, அங்கு  இரண்டு தளங்களை கொண்ட பங்களாவை ஜெயலலிதா கட்டி வசித்து வந்தார். தற்போது இந்த வேதா நிலையத்தின்  சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் என  வழக்கில் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா அரசியலில் கோலோச்ச தொடங்கிய காலத்தில், தீபக், தீபா அவ்வளவு நெருக்கத்தில் இல்லை.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசு யார்  என கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் தான் எனக் கூறி, அவரது அண்ணன் பிள்ளைகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்து மற்றும் வேதா நிலையத்துக்கு சொந்தம் கொண்டாடினார்கள். அதேநேரத்தில் மறுபுறம் அந்த இல்லத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற அ.தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 22 ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனை எதிர்த்து நீதிமன்றத்தை தீபாவும், தீபக்கும் அணுகிய நிலையில், அவர்கள் இருவரும் தான் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை ஏன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றக் கூடாது எனவும், அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தீபா, தீபக் ஆகிய இருவரும் தான் வாரிசுகள் என அறிவித்தது மூலம், ஒரு கேள்விக்கு பதிலை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2323 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1170 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

281 views

ஐபிஎல் போட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - ஜாஸ் பட்லர்

ஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

210 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

85 views

பிற செய்திகள்

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

2604 views

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

78 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

17 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

13 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

28 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

353 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.