ஆர்.எஸ்.பாரதி கைது - திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் கண்டனம்
பதிவு : மே 23, 2020, 07:06 PM
மாற்றம் : மே 23, 2020, 07:18 PM
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்து, அதிகாலையில் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

* கொரோனா தடுப்பு தோல்வியை மூடி மறைக்கவும்,  நிர்வாக தோல்வியை திசை திருப்பும் செயலாகவும் இந்த கைது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

* பட்டியலின- பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், சமத்துவ நீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் கட்சி திமுக என்று தெரிவித்துள்ள அவர்,இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களை பார்த்து ஒருபோதும் திமுக மிரளாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* இதேபோல், ஆர்.எஸ்.பாரதி கைது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயல் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அரசியல் விளையாட்டுக்கு பட்டியலின மக்களை பகடைக் காயாக்குவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

* அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

* ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது அப்பட்டமான சட்ட அத்துமீறல், பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், 
ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கை வாபஸ் வாங்கி, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

118 views

பிற செய்திகள்

இந்திய கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி காலமானார்

மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

6 views

"கொரோனா பாதிப்பிலிருந்து கிராமங்களை பாதுகாக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு கோரிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து கிராமங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

61 views

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5000 நேரடி பண உதவி" - தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

606 views

இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

99 views

"பெரும்பான்மையை நிரூபிக்க கோரமாட்டோம்" - ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவ​ர் தகவல்

தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சிக்குள் பூசல் உள்ளது தெளிவாக தெரிவதாக ராஜஸ்தான் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சதீஸ் புனியா தெரிவித்துள்ளார்.

59 views

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு - மாநில தலைவர் பதவியையும் பறித்து காங்கிரஸ் கட்சி அதிரடி

ராஜஸ்தானில் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடம் இருந்து துணை முதலமைச்சர் பதவி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறித்து அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.