அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு - அ.தி.மு.க-வின் 5 - ஆம் ஆண்டு பயணம் துவக்கம்
பதிவு : மே 23, 2020, 09:40 AM
அதிமுக ஆயிரங்காலத்து பயிராக செழித்து ஓங்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுப்பெற்று, ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது.  இதையொட்டி, அதிமுக சாதனைகளை பட்டியிலிட்டு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தியது, என பல்வேறு சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  அதிமுக என்னும் ஆலமரம் ஆயிரங்காலத்து பயிராக செழித்து ஓங்கும் என்றும், தமிழக மக்கள் அதிமுக அரசே தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்திட வேண்டும் என விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  அதிமுக அரசே தொடர்வதை உறுதி செய்திட, அயராது உழைப்போம் என்றும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1097 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

68 views

கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

21 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

95 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

8 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

95 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

102 views

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.