சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்" - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்

ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளையும், பிரதமர் நநேரந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர் - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்
x
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம், கொரோனாவை தொடர்ந்து நாடு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தற்போது நாட்டில் அனைத்து அதிகாரமும் பிரதமர் அலுவலகத்தில் கு​விக்கப்பட்டு உள்ளதாக சோனியா காந்தி குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக உள்ள எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் ஆலோசனையையும் பெற மத்திய அரசு முயற்சிக்கவில்லை என்றார். பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களையும் முழுமையாக விற்றுவிட மத்திய அரசு  துடிப்பதாகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்பப் பெற அதிக ஊக்கம் காட்டுவதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்