அமைச்சர் எஸ்.பி வேலுமணி பற்றி அவதூறு பரப்பியதாக புகார் - தி.மு.க., எம்.எல்.ஏ மீது காவல்நிலையத்தில் தனியார் நிறுவனம் புகார்
பதிவு : மே 23, 2020, 09:17 AM
தனியார் நிறுவனம் ஒப்பந்த பணிகள் பெற்றதன் பின்னணியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இருக்கிறார் என அவதூறு பரப்புவதாக புகார் எழுந்ததால் சிங்காநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தி.மு.க.-வின் கோவை கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த பணிகள் விவரங்கள், மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் ஏன் வெளியிடப்படுவதில்லை என அந்த அறிக்கையில் கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது சகோதரரின் உதவியுடன் தங்களது நிறுவனம் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் டெண்டர் வாங்கியதாக உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் நிறுவனத்தையும், அமைச்சரையும் இணைத்து பொய்யான தகவல்களை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பரப்பி வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மீது, மூன்று பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1107 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

34 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

68 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

9 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

31 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

812 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

8 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.