கொரோனா ஊரடங்கு - உரிய நிவாரணம் வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு - உரிய நிவாரணம் வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கையில்  கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சமூக விலகலை பின்பற்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதே போன்று ராமேஸ்வரத்தில் திரண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்வாவை கையில் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 லட்சம் கோடி அறிவிப்பதாக கூறி மத்திய அரசு ஏழை மக்களுக்கு அல்வா கொடுத்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.


கொரோனா நிவாரண நிதி பொது மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஐ கட்சி சார்பில், பரமக்குடி அருகே பார்த்திபனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வெறும் 6 பேர் மட்டுமே பங்கேற்றனர். n ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ-10ஆயிரம் நிவாரணம் வழங்க  வலியுறுத்தி காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்