இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது ஒரு உரிமை - மத்திய அரசு பறிக்க முயல்கிறது - கே.எஸ்.அழகிரி

தற்சாற்பு இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து பல்வேறு கட்சியினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது ஒரு உரிமை - மத்திய அரசு பறிக்க முயல்கிறது -  கே.எஸ்.அழகிரி
x
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சாற்பு இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து பல்வேறு கட்சியினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தமது டிவிட்டர் பதிவில் 
மோடியின் பகட்டான பொருளாதார திட்டங்கள் கிரிப்ஸ் எனும் ஆங்கிலேயரிடம் காந்தி கூறியதை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

திவாலாகி போன வங்கியின் பின் தேதியிட்ட காசோலை போன்றது என்றும் காந்தியின் கூற்றை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது ஒரு உரிமைஎன்றும், அதனை மத்திய அரசு பறிக்க முயல்வதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின், புதிய அறிவிப்புகள் நாட்டின் பொருளாதாரம் வருங்காலத்தில் மேம்படும் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்