அரசு உறுதி செய்ய வேண்டும்""அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குக" - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : மார்ச் 23, 2020, 07:30 PM
தனிமைப்படுத்தல் முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதை, அரசு உறுதிசெய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ​கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசங்கள், முழு பாதுகாப்பு உடை கவசங்கள், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஐ.சி.யூக்களை அமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், இதற்காக தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் நிதி போதாது என்று கூறினார்.மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதை உறுதிசெய்யவும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியுதவி வழங்கிடவும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன்,  ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வது ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின் தனிமைப்படுத்துதல் முயற்சிக்கு, இதுவே வலுசேர்க்கும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனத்துடனும், அக்கறையுடனும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

86 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

9 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

33 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

19 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

119 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.