கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ரூ.500 கோடி - தமிழக அரசு
பதிவு : மார்ச் 23, 2020, 04:23 PM
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை, உயர்த்தப்படும் என்றார்.

* கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

* வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக்கதவில், தனிமை படுத்தப்பட்டவர்கள் என்ற விவரம் ஒட்டப்படும் என்று கூறினார்

* தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் 25 சதவீதம் ஒதுக்கப்படும் எனறு அவர் கூறினார்

* தலைமை செயலாளர் தலைமையில், டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு, அந்த கூட்டமும் அவ்வப்போது நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.தாமும், நாள்தோறும் ஆய்வுசெய்து நி​லைமையை கண்காணித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

* விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டவர்களில் வீட்டு கண்காணிப்பில் 9 ஆயிரத்து 424 பேரும், அரசு கண்காணிப்பில் 198 பேரும் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

* கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததார்

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

0 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

27 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

18 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

117 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

320 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.