"தேச நலன் கருதி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள்
பதிவு : மார்ச் 20, 2020, 12:09 AM
கொரோனாவை கட்டுப்படுத்த தேச நலன் கருதி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தேச நலன் கருதி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப் படுத்துவதற்கும் மத்திய - மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக  கூறியுள்ளார். தேச நலனும், மக்கள் நலனும் நமக்கு முக்கியமாக  இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே இன்றைய நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  தயாரிப்பாளர் சங்க தேர்தலை நீதிமன்றம் அறிவித்திருந்தாலும் தற்போதைய அசாதாரணமான சூழலை கருதியும், மனிதாபிமான அடிப்படையிலும் தேர்தலை ஒத்திவைக்குமாறு சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

539 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

154 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

94 views

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

7 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

29 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

5 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

52 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

282 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.