கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையா? : ஆண்டுகளாக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லையா? - அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியது உண்மைதானா?
பதிவு : மார்ச் 19, 2020, 12:54 PM
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பேச்சில் வெளிப்படும் தகவல்களிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது.
தமிழக சட்டபேரவையில் 17ஆம் தேதி அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசிய காட்சி இது. மீன்வளத்துறை மீது காரசாரவிவாதங்கள் நடைபெற்ற போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 
நடத்தும் தாக்குதல்  குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ் மணியன்  கடந்த 7ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என்றார். இந்தியா - இலங்கை இடையிலான கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவானவை.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறுவது உண்மைதானா...

இந்த கேள்விக்கு விடை என்ன?

ஓ.எஸ் மணியன் கூறும் தகவல்கள்  பற்றி ஆராய்ந்த போது,அவர் சொல்வது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது.  
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிஜ்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டது. அதில் பிரிஜ்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவர் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி பிரிஜ்ஜோவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது வரலாறு . 

மேலும் கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது . அதில் படகில் உள்ள   கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பட்டு கண்ணாடி உடைந்து தெறித்து  ஜேசு என்ற மீனவரின் கண்ணில் குத்தியது இதனால் பாதிக்கப்பட்ட மீனவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் பலமுறை எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கதாகக் கூறி  இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கியும் மீனவர்களின் படகை நோக்கியும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாக புகார்கள் எழுந்தன. 

எனவே கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என சட்டபேரவையில் ஓ.எஸ் மணியன் கூறியது தவறான தகவல்.  

மூன்றாண்டுகளுக்கு முன்பும் அதன் பிறகும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்பதே உண்மை .. 

தொடர்புடைய செய்திகள்

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

36 views

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

36 views

பிற செய்திகள்

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

88 views

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

459 views

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

303 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

117 views

"மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்" - ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

31 views

ராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..!!

ஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.