தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அதிருப்தி?
பதிவு : பிப்ரவரி 15, 2020, 11:58 AM
தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டப்படி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய வரிகளில் இருந்து மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.02 சதவீதத்திலிருந்து 4.18 சதவீதமாக சிறிய அளவே உயர்ந்துள்ளதாகவும் நிதிப்பகிர்விற்கு பிறகு 74,340 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க நிதிக் குழு பரிந்துரைத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு விட்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2019 - 20 நிதி ஆண்டில் 7 புள்ளி 7 சதவீதம் என மதிப்பிடப்பட்ட வளர்ச்சி இந்திய அளவில் கணிக்கப்பட்ட 5 சதவீதத்தை காட்டிலும் அதிகம் எனவும் தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

449 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

42 views

பிற செய்திகள்

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

5476 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

567 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

130 views

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

31 views

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

14 views

"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.